வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து குதறிய சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெரியதாமல் செருவு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர், அவரது விவசாய நிலத்தில் ஆடு உள்ளிட்ட கால்நடைகளை ஆடு, மாடு வளர்த்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் ஆடுகளை கொட்டகையில் கட்டி விட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு நுழைந்த சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து குதறியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.