மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில், பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீன மடாதிபதியின் பட்டிணப்பிரவேச விழா ஞானபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதியை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.
இதில், தருமபுர ஆதீன மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சிவிகையில் எழுந்தருளினார்.
அவரது சிவிகையை 70 பேர் சுமந்து சென்றனர். ஆதீன மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் மடாதிபதிக்கு பொதுமக்கள் பூரண கும்ப வரவேற்பு அளித்தனர்.
பட்டண பிரவேசம் முடிவடைந்து ஆதீன மடாதிபதி ஞான கொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.