தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் 4-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இன்றிலிருந்து வரும் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பீகாரின் சில பகுதிகளில் இன்று மிகக் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.