புதுச்சேரியில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து தனது யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்த நபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த துர்க்கை ராஜ் என்ற வாலிபர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரிடம் நட்பாக பழகிவந்த பெண்ணுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த துர்க்கைராஜ் அந்தப் பெண் தொடர்புடைய வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கவே துர்க்கை ராஜை போலீசார் கைது செய்தனர்.