அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?
Jun 6, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு  வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நடைபெற உள்ளது. இரு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது… 2022-ல் கிரீமியா பகுதிக்காக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளிலும் வெடித்த மோதல் இன்னும் முடிந்த பாடில்லை.

அதிபராக பதவியேற்றப் பின் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவேன் என்று கூறிய டிரம்ப், அதனை நிஜமாக்க முனைப்புக் காட்டி வருகிறார். அவர் ஏற்கனவே கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி அலாஸ்காவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார்.

முன்னதாக, இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறியிருந்தார். உக்ரைனிடம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் சிலவற்றை மீண்டும் உக்ரைனுக்கு வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தைக்குப் பின், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

விளாடிமிர் புதின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா செல்லும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ரஷ்யா தரப்பில், போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை புதின் முன்வைப்பார் என்றும், அதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடம் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதே நேரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை குறித்தும் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையை ரஷ்ய அதிபர் புதின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்றும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைப் பலவீனப்படுத்தி, போரை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திவிடுவார் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனை தவிர்த்துவிட்டு ரஷ்யா உடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் புதினுக்கு இந்தப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் எதுவும் இல்லை என்றும், டிரம்புடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்காகவே செல்கிறார் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. எதுவாயினும், இருதரப்பு தலைவர்கள் சந்தித்த மூன்று நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

Tags: russiaDonald TrumpMeeting with Putin in Alaska: Will Trump's effort work?
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

Next Post

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு கோகோ காப் முன்னேற்றம்!

Related News

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

அந்த நிறுவனத்தை நம்பியதால் மோசம் – கள ஆய்வில் குமுறிய திமுக தொண்டர்கள் – சிறப்பு தொகுப்பு!

மியான்மரில் பயங்கர வெடி விபத்து – குழந்தைகைள் உள்ளிட்ட 45 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies