புதுச்சேரியில் உள்ள இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயத்தின் 117-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவுக்கு முன்னதாக பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும் பாஸ்கர் ஏசுராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.