நடிகர் சூரி நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வெளியானதையொட்டி, ராமநாதபுரத்தில் அவரது ரசிகர் மன்றத்தினர் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.
நடிகர் சூரி, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த கருடன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது.
ராமநாதபுரம் ‘தி சினிமா’ தியேட்டரில் வெளியான இந்தப் படத்தை கொண்டாடும் விதமாக, சூரி ரசிகர் மன்றத்தினர் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.