கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்களை அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரிபுரா, மேகாலயா, அசாம், மேற்கு வங்கத்தில் இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகள், சிக்கிம் ஆகிய மாநிலங்களை தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது.
இதேபோல வடமேற்கு மாநிலங்களில் சில பகுதிகளையும் தென்மேற்குப் பருவமழை அடைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-இல் தொடங்கி ஜூன் 5-இல் வடகிழக்கு மாநிலங்களை அடையும் தென்மேற்குப் பருவமழை, நிகழாண்டு அதற்கு முன்னதாகவே அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.