நாகையில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததால் கோமாவுக்கு சென்ற சிறுவன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினான்.
திருக்குவளையை அடுத்த மோகனூரை சேர்ந்த திவாகர், தனது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, கட்டுவிரியன் பாம்பு அவனது கையில் கொத்தியது.
இதனால் திவாகரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்தன. அரிய நரம்பியல் நோயால் பாதிப்புக்குள்ளான திவாகர், கோமா நிலைக்குச் சென்றான்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் வென்டிலேட்டர் உதவியுடன் திவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்ததால், ஏழு நாளில் திவாகர் உடல்நலம் தேறி, வீடு விரும்பினான்.