விருதுநகரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அடுத்த திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர்கள் லிங்கம்- பழனியம்மாள் தம்பதி. இவர்கள் கடன் தொல்லை காரணமாக மகள், மகன் மற்றும் பேரனுக்கு விஷம்கொடுத்து தற்கொலை செய்துகொண்டனர்.
இந்த வழக்கில் அவர்களுக்கு கடன் கொடுத்து மிரட்டல் விடுத்த அருண்குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.