குத்தாலம் அருகே மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், மருத்தூரில் மகா மாரியம்மன் கோவில் விழா கடந்த 22 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. வீரசோழன் ஆற்றின் கரையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில், 15 அடி நீளம் கொண்ட அலகினை பக்தர் ஒருவர் தனது வாயில் குத்தியபடி தீமிதித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.