பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் தகுதியுள்ள வேட்பாளருக்கு வாக்களிக்க வலியுறுத்தி பெண்கள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் வாக்களித்தனர்.
முன்னதாக பெண்கள் பாராம்பரிய உடை அணிந்து வாக்குச்சாவடியில் நடனமாடினர். சிறந்த தகுதி வாய்ந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும், நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.