சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 710 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது.