இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவு அலை வீசுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கவுன்சிலரால் இளைஞர் தாக்கப்பட்ட சம்ப்வத்தில் கவுன்சிலர் கைது செய்யப்படவில்லை என்றும், அந்த இளைஞர் மற்றும் அவர் தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஐந்தாவது இடத்திறக்கு முன்னேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
2027-ம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்தை அடைவோம் என்பதே மோடியின் கேரண்டி என்றும் எல் முருகன் தெரிவித்தார்.