முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு நீர் தமிழகத்தில் 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜை செய்து மலர் தூவி அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் தண்ணீரை திறந்து வைத்தனர்.
இதனால், தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.