தாங்கள் அனைவரும் பிரதமரின் போர் வீரர்கள் என ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இறுதிகட்டத் தேர்தலையொட்டி, இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் வாக்களித்த அவர், ஜனநாயகத் திருவிழாவில் வாக்குரிமையை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், ஹிமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என கங்கனா ரனாவத் நம்பிக்கை தெரிவித்தார்.