அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே காசாவுக்கு எதிரான போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதற்கான அழைப்பு கடிதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் மைக் ஜான்சன் உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்.