மதுரை அழகர்கோவில் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மீன்பிடித்து மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம், கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ஐந்து கோயில் முத்தன் கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் ஐந்து கோயிலில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் மீன் குஞ்சுகளை காணிக்கையாக வாங்கி விடுவது வழக்கம்.
இந்நிலையில், மீன்பிடி திருவிழாவுக்காக அதிகாலை முதலே நத்தம், மேலூர், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, சிங்கம்புனரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, அயிரை, ரோகு, பாப்லட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை போட்டி போட்டு பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.