ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவகக் சங்கம் சார்பில் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் 300 வது ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் உள்ள விவேகானந்தர் வித்தியாலய பள்ளி இன்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவகக் சங்கம் சார்பில் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் 300வது ஜெயந்தி விழா நடைபெற்றது.
ராணி அஹில்யா பாய் மராட்டியப் பேரரசின் இந்தூர் அரசை ஆட்சி செய்தவராவார். இவர் அகமத்நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் ஆட்சியில் தலைநகரத்தை இந்தோரின் தெற்கில் நருமதையில் அமைந்துள்ள மகேசுவருக்கு மாற்றினார்.
தன்னுடையா அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காக்க பாடுபட்டார். இவர் தன்னுடைய போர்படையை வழிநடத்துவதிலும் தன்னுடைய வீரத்தை காட்டினார்.
இவர் துகோசி ஓல்கரை தன்னுடைய தளபதியாக நியமித்தார். இவரது 30 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியும் நடத்தினார். இவர் வாழும்போது மரியாதையுடனும், இறந்த பிறகு துறவிபோலவும் கருதப்பட்டார் என்பது வரலாறாக உள்ளது.
இவ்விழா மேடையில் பேசிய மாநகர துணை தலைவர் மோகன்,
ராணியாக இருந்து தெருவில் வந்து மக்களுக்கு சேவை செய்தவர் இவர். இந்த பெண்மணியால் தான் காசி உருவானது எனத் தெரிவித்தார். பல கோயில்களை புனரமைத்தார்.
இதுகுறித்து பேசிய வித்யா பாரதி அமைப்பு செயலாளர் சுந்தார்,
இன்றைய இளம் தலைமுறைக்கு அவரின் செயல்பாடுகள் தெரியும் வண்ணம் செய்து உள்ளோம். ஆன்மீக தொண்டு பணியை அவர் செய்து உள்ளார். பல சிவன் கோயில்களை இவர் புனரமைத்துள்ளார். துணி நெய்தல் தொழில் உருவாக்கியவர் இவர்.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்டவையை அவர் செய்துள்ளார். இவற்றை போற்றும் வகையில் ஓர் ஆண்டுக்கு இந்த விழா நடைபெறும் என தெரிவித்தார்.
இதில் ஆர்.எஸ்.எஸ் சென்னை மாநகர ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம், மாநகர துணை தலைவர் மோகன், வித்யா பாரதி அமைப்பு செயலாளர் சுந்தார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.