மயிலாடுதுறையில் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார பெண் ஆய்வாளர் உள்பட 2 பேரை உணவக ஊழியர்கள் தாக்கியதை கண்டித்து நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சேரி சாலையில் உள்ள அசைவ ஓட்டலில் சுகாதாரமின்றி திறந்தவெளியில் உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து சுகாதார ஆய்வாளர் பிருந்தா மற்றும் உதவியாளர் முருகராஜ் ஆகியோர் உனவகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது இருவரையும் உணவகத்தில் இருந்த சுமார் 20 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.