அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மதுபோதையில் சாலையில் படுத்து கிடந்த நபரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடுகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, இவருடைய மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பார்ப்பதற்காக மணி மதுபோதையில் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையின் நடுவே படுத்துள்ளார்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மணியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.