வேலூரில் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு புள்ளி மான்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அணைக்கட்டு அடுத்த அரிமலை கிராமத்தில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.
இந்த கிண்ற்றில் இரண்டு புள்ளி மான்கள் தவறி விழுந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து விரைந்த சென்ற தீயணைப்புத் துறையினர் புள்ளி மான்களை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.