திண்டுக்கல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பஞ்சாலை தொழிற்சாலை ஊழியர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
தாடிக்கொம்பு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வளைவில் திரும்ப முயன்றுள்ளது.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த கார், பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.