உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வெப்ப அலையால் மரத்திலிருந்து குரங்கு ஒன்று மயங்கிக் கீழே விழுந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் குளிர்ந்த நீரை அந்தக் குரங்கின் மீது தெளித்து அதன் முதுகில் தடவி விட்டனர்.
இதனால் மயக்கம் தெளிந்த குரங்குக்கு ஓ.ஆர்.எஸ். கரைசலைப் பொதுமக்கள் வழங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.