அருணாசல பிரதேசம், மேற்கு வங்கத்தில் இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகள், சிக்கிம், கேரளா மற்றும் மாஹியில் ஜூன் 3-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் வட மாநிலங்களில் நிலவும் வெப்ப அலையின் பிடியிலிருந்து பொதுமக்கள் விடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகி வந்த நிலையில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்பட்டதுடன், புழுதி காற்று வீசியது.