அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில், இந்திய வம்சாவளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான புருஹட் சோமா என்ற 12 வயது மாணவர், 90 விநாடிகளில் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்து முதல் பரிசை வென்றார்.
7-ஆம் வகுப்பு படிக்கும் புருஹட் சோமாவுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது.