தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கேரள மாநிலம் திரிச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை 2 நாட்களுக்கு முன்னதாகவே நிகழாண்டில் தொடங்கிய நிலையில், மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.