ஜாமீனை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், ஜூன் 5-ஆம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் ஜூன் 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி கூறினார். கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நிறைவடைவதால், அவர் சிறைக்குத் திரும்பவுள்ளார்.