வட மாநிலங்களில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 45 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி வருவதால், பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, வெப்ப அலை பாதிப்பால் உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 29-ந்தேதி நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக 127 டிகிரி பாரன்ஹுட் வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.