ஹமாஸ் ராணுவம் முற்றிலும் ஒழியும்வரை காசாவுடன் நிரந்தர போர்நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹமாஸின் பிடியிலிருக்கும் தங்களது பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மூன்றுகட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தையை முன்மொழிந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும், பணயக்கைதிகளை விடுவித்து, ஹமாஸ் ராணுவம் அழிக்கப்படும் வரை நிரந்தர போர்நிறுத்தம் கிடையாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.