ரஷ்யாவிலிருந்து கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில், மே மாதம் அதிகளவு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் தினமும் சராசரியாக 1.96 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததால், அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.
இதனால், இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா விநியோகம் செய்து வருகிறது. இதன்காரணமாக சவூதி அரேபியாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவு 11.4 சதவீதமாக சரிந்துவிட்டது.