மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வைத்தியநாதபுரத்தில் கடந்த 31-ம் தேதி இரவு கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையேயான முன்விரோதத்தின் காரணமாக சாமி ஊர்வலத்தின் போது சிலர் திடீரென பெட்ரோல் வெடி குண்டை வீசிவிட்டு தப்பியோடி உள்ளனர்.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.