மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலுக்குபிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் 7-வது கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்துக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி TIMES NOW வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 22 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18 சேனல் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபட்சமாக 32 முதல் 35 இடங்களிலும், இண்டியா கூட்டணி அதிகபட்சமாக 15 முதல் 18 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் REPUBLIC சேனலின் கருத்துக் கணிப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 31 இடங்களிலும், இண்டியா கூட்டணி 17 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.