“காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டு ஆட்சியைவிட பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சியை நாடு பெற்றுள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காட்பாடியில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்தடைந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சியில் கஞ்சா , கொலை, கொள்ளை அதிகமாகிவிட்டதாக குற்றம் சாட்டினார். 2026 -ல் தமிழகத்தில் பாஜக பலமான கட்சியாக உருவாகும் என அவர் தெரிவித்தார். 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் தமிழிசை கூறினார்.