ராமேஸ்வரம் அருகே கொளுத்தும் வெயிலுக்கு வடமாநில கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாமாக உயிரிழந்தார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அரியாங்குண்டு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், வெயிலின் தாக்கத்தால், இளைஞர் நபிஸ் முகமது, குல்பி ஐஸ் விற்பனை செய்யும்போதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.