மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவை மீறி, நாமக்கல் நகரில் பள்ளி சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறார்கள் வாகனத்தை இயக்கினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களது பெற்றோர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய விதிமுறைகள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் நகரைச் சேர்ந்த சிறுவன், தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை இயக்கி அதனை ரீல்ஸ் ஆக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.