விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் காவல் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். சங்கரமூர்த்திப்பட்டியை சேர்ந்த நடராஜன், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சொக்கலிங்கம் அருகே வந்தபோது, குறுக்கே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, நடராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.