கடையநல்லூர் காமராஜர் பேருந்து நிலைய கட்டிடத்தின் மேல் நின்று தற்கொலைக்கு மிரட்டல் விடுத்த போதை நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மதுபோதையில் இருந்த இளைஞரிடம் லாவகமாக பேசி அவரை பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரகுவரன் என்பதும், குடும்ப பிரச்னை தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.