திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பணம் தர மறுத்த மளிகைக்கடைக்காரரை ரவுடிகள் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள மளிகை கடையில் சூர்யா என்பவர் வியாபாரம் செய்துள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கடையில் பொருள் வாங்குவதுபோல சென்று ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.
அப்போது பணம் தர மறுத்ததால் சூர்யாவின் தலையில் கத்தியால் தாக்கிவிட்டு கல்லாவில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.