கேரளவில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மழை கொட்டி வருகிறது. இந்நிலையில், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல், வயநாடு, ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.