மத்தியப்பிரதேச மாநிலம், ராஜ்கார் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் பிப்லோடி பகுதியில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தானின் மோதிபுரா பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் டிராக்டரில் சென்றுள்ளனர்.
ராஜ்கார் பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், சாலை விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.