பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஒரு வெளிநாட்டு பிரதேசம் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வசித்துவந்த காஷ்மீர் பத்திரிகையாளர் அஹமத் பர்ஹத் ஷாவை, உளவுத்துறையினர் கடத்தி சென்றனர்.
அவரை மீட்டுத் தரும்படி அவரது மனைவி தொடர்ந்த வழக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அஹமத் பர்ஹத் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என பாகிஸ்தான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, ஆக்கிரமிப்பு காஷ்மீர், வெளிநாட்டு பிரதேசம் என்றால், பாகிஸ்தான் ராணுவம் எப்படி அங்கு நுழைந்தன என கேள்வி எழுப்பினார்.