பாகிஸ்தானில் ஜமியத்-இ உலமா இஸ்லாம் அமைப்பின் படைத் தளபதி முஃப்தி ஜீஷன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம், காரக் மாவட்டம் லதாம்பெர் பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.கே.பி. அமைப்பு, ஏற்கெனவே அவரை பலமுறை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் முஃப்தி பஸல் என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.