தாம் சிறைக்குச் செல்வதை தம்முடைய ஆதரவாளர்களால் ஏற்க முடியாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
2016-ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர்களை நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு வழங்கியதாக எழுந்த புகார் நிரூபணமானதால், ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அவரது தண்டனை விபரங்கள் வரும் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ட்ரம்ப், இந்த தண்டனையை தான் ஏற்றுக் கொண்டாலும் பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், ஒரு கட்டத்தில் மக்கள் தங்களது பொறுமையை இழப்பார்கள் என்றும் கூறினார்.