அமெரிக்காவைச் சேர்ந்த 93 வயது தொழிலதிபரான ரூபர்ட் முர்டோக், தமது 67 வயது காதலியான எலெனா ஜூகோவாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது அவரது 5-வது திருமணம் ஆகும். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளரான ரூபர்ட் முர்டோக், தமது மகனிடம் கடந்த நவம்பர் மாதம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்நிலையில், ரூபர்ட் முர்டோக், தனது 67 வயது காதலியான எலெனா ஜூகோவாவை மணந்துக்கொண்டார்.