நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, திருச்சி தொகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறன.
வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேஜைகள், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 11 மேஜைகள் என மொத்தமாக 95 மேஜைகள் போடப்பட்டுள்ளன.
ஒரு மேஜைக்கு மூன்று பணியாளர்கள் வீதம் மொத்தமாக 306 பேர் வாக்கு என்னும் பணியில் ஈடுபட உள்ளனர். 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன.