அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அய்யனாரப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ரெட்டப்பள்ளம் பகுதியில் உள்ள அய்யனாரப்ப கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த வாரம் தொடங்கியது.
நாள்தோறும் அய்யனாரப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், 4ஆம் நாள் கால யாகபூஜையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்