மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும், மனைவி ராதிகா வெற்றிபெற வேண்டியும் விருதுநகர் மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார்.
இதையொட்டி, அவரது கணவரான சரத்குமார், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் ராதிகா வெற்றிபெற வேண்டியும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சரத்குமாருடன் இணைந்து ராதிகாவும் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்துப் வழிபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.