சென்னை, கொளத்தூர் பகுதியில் இளபெண்ணை பாலியல் சீண்டல் செய்து மிரட்டல் விடுத்த சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவர் சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் முகமது அலி தமக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்து பணம் பறித்ததாகவும் புகாரளித்தார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.