அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் உள்ள இருப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் ராஜேஸ்வரிக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சக ஊழியர்கள் ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.